விழிகள் மூடினால்
உள்ளத்துள் நுழைந்து
ஊஞ்சலாடுகின்றாய்…
உன்னை இரசித்துக்கொண்டு
தூக்கத்தில் ஆழ்ந்தாலோ
கனவினில் வந்து
கவிதைகள் வரைந்து
கொஞ்சுகின்றாய்
என்னை மயக்குகின்றாய்…!!!
பெண்ணே!
தனிமையை அழித்து
உன்னை பதித்து
என்னைப் பற்றிய
காதல் நோய்
உன்னைப் பற்றுவது
எப்போது
கண்ணே!!!