உன் குரல் கேட்கும் போதெல்லாம்
என் விழிகள் அலைபாயுதே
சுற்றிச் சுற்றிப் பார்க்குதே
உன் முகத்தை தேடுதே
உள்ளம் வாடிப் போகுதே
விழிகள் நீரில் மிதக்குதே
சட்டென்று முன்னே தோன்றி
ஏக்கம் தீர்க்க மாட்டாயா…
கண்கள் மூடும் போதெல்லாம்
என்னுள்ளே நுழைகிறாய்
சேட்டைகள் பல செய்கிறாய்
கண்கள் திறக்கும் நேரத்தில்
எங்கோ ஓடி ஒளிகிறாய்
மனதை நோகச் செய்கிறாய்
சட்டென்று முன்னே தோன்றி
ஏக்கம் தீர்க்க மாட்டாயா…
துயில் கொள்ளும் போதெல்லாம்
காதல் கதைகள் சொல்கிறாய்
வெட்கம் கொள்ளச் செய்கிறாய்
தூக்கம் கலைந்து பார்க்கும்போது
கனவாய் மறைந்து போகிறாய்
ஏங்கித் தவிக்க வைக்கிறாய்
சட்டென்று முன்னே தோன்றி
ஏக்கம் தீர்க்க மாட்டாயா…