அன்ன நடையழகி
இஞ்சி இடுப்பழகி
இந்த மாமனோட மனச
கொள்ளைகொண்ட பேரழகி
நகை நட்டு ஒண்ணும் வேணாம்
அப்பன் கிட்ட சொல்லிவிடு
உன் புன்னகை ஒண்ணு மட்டும்
போதும் என்று சொல்லிவிட்டேன்
பாத்திரங்கள் ஒண்ணும் வேணாம்
அம்மா கிட்ட சொல்லிவிடு
உன் கள்ளமில்லா உள்ளம் மட்டும்
போதும் என்று சொல்லிவிட்டேன்
பணம் காசு ஒண்ணும் வேணாம்
காணி பூமி ஒண்ணும் வேணாம்
உன் ஆசை மாமன் நானும்
சேத்து எல்லாம் வைச்சிருக்கேன்
வாற மாசம் நல்ல நாளை
ஜோசியரை கேட்டுவிட்டு
பெற்றவங்க ஆசியோட
பொண்ணு கேட்க வாரேன் கண்ணு…..