உச்சி முதல் உள்ளங்கால் வரை
அவள் எழிலில் மயங்கி
தன்னை மறந்து
தன் கடமை மறந்து
பித்தனாய்
பின்னே திரிந்து
ஒரு தலையாய் காதலித்து
தன்னை இழந்தான்
தன் அழகை இழந்தான்
சொத்தை இழந்தான்
சொந்தங்களையும் இழந்தான்
யாவையும் பறித்துவிட்டது
காதல்…
ஏற்காத காதலை
தொடராதீர்…
ஒரு தலையாய் காதலை
வளர்க்காதீர்…
மௌனமாய் காதலை
வைக்காதீர்
ஏமாந்து புதைகுழியில்
வீழாதீர்…