அவள் அருகே நின்றபோது
எதுவும் தோன்றவில்லை…
தலைவிரித்தாடியது
உணர்வுகள் மட்டுமே…
விலகியதும்
கவிதை மொட்டுக்கள்
அரும்பின
இதயத்தை பிளந்து…
வர்ணனைகள் சூடி
வண்ணங்கள் தீட்டி
அழகுக்கு மெருகூட்டி
மலர்ந்தன…
உள்ளத்தை
நிறைத்தன…
அந்த நந்தவனத்தில்
வந்து பூத்துவிட்டாள்
ரோஜா மலராய்…
என் இதயத்தின் ராணியாய்…
ஒரே நாளில்!!!