ஆயிரமாயிரம் கணைகள்
பட்டுத் தெறித்தாலும்
என்
விரதம் உடைத்து
இதயத்தை தைத்துவிட்டதே
அவன் தொடுத்த
ஒற்றைக் கணை!!!
பயணம்
இலட்சியத்தோடு என்றிருந்தேன்…
இணைந்துவிட்டான்
என்னுடன்…
காதலில் வெல்வதே
இலட்சியம் என்று
சத்தியத்தால்
என்னைக் கட்டிவிட்டான்…
செல்லும் பாதை
நந்தவனம் என்று
சொர்க்கத்தை
எனக்கு காட்டிவிட்டான்…!!!