உன்னுடன் கழிக்கும்
ஒவ்வொரு கணமும்
உள்ளத்தில்
அழியாது பொறிக்கப்படும்
அழகான தருணங்கள்…
உனது நினைவுகளில் மிதக்கும்
ஒவ்வொரு கணமும்
உள்ளத்தின்
ஏக்கத்தைத் தீர்க்கும்
சுகமான தருணங்கள்…
உன்னை கனவுகளில் காணும்
ஒவ்வொரு கணமும்
உள்ளத்தை
கவர்ந்து மகிழ்விக்கும்
இனிமையான தருணங்கள்…