சிவனின் மைந்தனே
எனது சிந்தையின் நாயகனே
பார்வதி தேவி அள்ளி அணைத்த ஆறுமுகனே
எனது சக்தி நீயே
விநாயகனின் தம்பியே
எனது பலம் நீயே
வள்ளி தெய்வயானை மணாளனே
எனக்கு ஆறுதல் நீயே
திருமாலின் மருமகனே
எனது வழிகாட்டி நீயே
‘ஓம் சரவணபவ’ எனும் திருநாமத்தை
மலர்களாக உனது காலடியில்
சமர்ப்பிக்கின்றேன்
ஏற்று அருள்புரிவாய்
வடிவேலவனே
ஓம் சரவணபவ
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.