பறவைகளைப் பாருங்கள்
கடமையை உணருங்கள்…
சோடிப் பறவைகள்
ஒற்றுமையாக
கூடு கட்டி முட்டை இட்டு
அடைகாத்து பாதுகாத்து
குஞ்சு பொரித்தவுடன்
இருவரும் சேர்ந்து
உணவு கொடுத்து
பறக்கக் கற்று வழிகாட்டி
கடமை முடிக்கின்றன…
இடையில் என்றாவது
சண்டையிட்டிருக்கின்றனவா
முரண்பட்டிருக்கின்றனவா
பிரிந்திருக்கின்றனவா…
நாம் ஏன்
அப்படி வாழக்கூடாது
நம் பிள்ளைகளுக்காக!!!