செல்லக்கண்ணா சின்னக்கண்ணா
பட்டுக்கண்ணா குட்டிக்கண்ணா
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…
ஆறுதல் அள்ளி வந்த மானே
ஆனந்தம் அள்ளித் தரும் தேனே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…
பூவுலகில் வந்துதித்த சூரியனே
உள்ளத்தை குளிர்விக்கும் சந்திரனே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…
தோளிலே சாய்ந்தாடும் தென்றலே
மடியிலே தவழ்ந்திருக்கும் பூங்கோத்தே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…
வம்சம் தழைக்க வந்த குலக்கொழுந்தே
வாழ்வில் ஒளிவீசும் மாணிக்கமே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…
செல்லக்கண்ணா சின்னக்கண்ணா
பட்டுக்கண்ணா குட்டிக்கண்ணா
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…