உள்ளம் குளிர
நிலவாக வந்தாள்…
அழகிலே மயங்கி நானும்
மேகமானேன்…
தென்றலாக என்னுள்
தவழ்ந்திருந்தாள்…
கவிதைகள் பலவாகி
கலந்திருந்தாள்…
சூழல் ஒன்று உருவானது
அதில்
அவளது முகப்பூச்சு கழன்று
சுயரூபம் தெரிந்தது…
அக்கணமே கனவாகி
கலைந்துவிட்டாள்…
உள்ளம் தீயாகி
எரிந்துவிட்டாள்…
மலர்ந்த நேசம்
சாம்பலாகியது
காதலாகுமுன்…
பாடம் ஒன்று கற்றுக்கொள்வோம்…
புற அழகில்
மயங்காதீர்
அக அழகையும்
கருத்தில் கொள்வீர்…