சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப காதலர்களோ, பெற்றோர்களோ, சமுதாயமோ காதலுக்கு எதிரியாகின்றனர்.
காதலர்கள் – சந்தேகம், விட்டுக்கொடுக்காமை, புரிந்துணர்வு இல்லாமை, அகங்காரம், தாழ்வு மனப்பான்மை என்பன இருவருக்குமிடையே நுழையும்போது காதலர்களே அவர்களுக்கு எதிரியாகின்றனர்.
பெற்றோர் – கல்விக்கு இடையூறு விளைவிக்கும்; குடும்பப் பொறுப்பை அலட்சியம் செய்யும்; அந்தஸ்த்து, இன, மத வேறுபாடு உள்ள காதலுக்கும் பொருந்தாத காதல் (பெண்ணுக்கு வயது அதிகம், விவாகரத்து செய்த ஆண்/பெண்,…) எதிரியாகின்றனர்.
சமுதாயம் – திருமணமான ஆண், மனைவி இருந்தும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருத்தல்.
இன்றைய காலகட்டத்தில் திருமணமான பெண்ணும், கணவன் இருந்தும் வேறொரு ஆணுடன் தொடர்பு கொள்கிறாள் என்பதை அறிவது மிக மிக வேதனையை தருகிறது.
இவற்றிற்கு சமுதாயம் எதிரியாகின்றது.
அத்துடன் சில கிராமப்புறங்களில் இன்றும் இன, மத வேறுபாடுள்ள காதலுக்கு சமுதாயம் எதிரியாகவே இருக்கிறது.