உன்னை
தெரிந்துகொண்டேன்
பெண்ணே!
தினம்
ஒரு புகழ் மாலை
அன்னை முன் என் தங்கை
பாடும் பொழுதுகளில்…
காணாமலே
காதல் கொண்டேன்
கருணையின் ஊற்று
உனது உள்ளம் என
அறிந்ததனாலே…
சொந்தம்கொள்ள
ஆசைகொண்டேன்
பேரழகின் இருப்பிடம்
உனது உள்ளம் என
புரிந்ததனாலே…
நம்புகின்றேன்
பெண்ணே!
நீ
எங்கிருந்தாலும்
உன்னை
என்னுடன் சேர்த்திடும்
என்
ஆழ்மனம்…
காலத்திற்காய்
காத்திருப்பேன்
காதலுடன்
வாழ்ந்திருப்பேன்…