இனித்த நட்பு
தித்தித்து காதலாக
கசந்த பெற்றோர்
வெறுப்பை உமிழ
நரகமானது வாழ்க்கை…
வீட்டுக்கு விளக்கேற்ற
மகாலக்ஷ்மி தேடும் பெற்றோர்
மகனின் உள்ளத்திலும் ஔிவீச வேண்டுமென
ஏன் எண்ணுவதில்லை…
மகளின் வாழ்க்கை சிறப்பாக அமைய
மாப்பிள்ளை தேடும் பெற்றோர்
அவளின் விருப்பமும் சம்மதமும் வேண்டுமென
ஏன் எண்ணுவதில்லை…
இல்லமும் உள்ளமும் ஔிவீச
இல்லறம் இனிதே அமைய
பிள்ளையின் விருப்பத்தை மறுக்காதீர்
காதலை வெறுக்காதீர்…