வைரப் பூக்கள் மத்தியிலே
மலர்ந்திருக்கும்
வௌ்ளைப் பூவே!
மாதம் ஒருமுறை மலர்ந்து
வானை அழகாக்கும்
வட்டப் பூவே!
மேகங்கள் தழுவிட
நாணி மறையும்
நிலாப் பூவே!
பறித்து உன்னை
காதல் பரிசாய் கொடுத்திட
பேராசை ஆசைகொண்டேன்…!!!
எட்டாத் தொலைவில் கொழுவிருக்கும்
காதல் பூவே!
என் கையில் வந்து வீழாயோ
காதல் தூதாய் செல்லாயோ!!!