ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காமம் கலந்த ஈர்ப்பே காதல்.
உரியவனை/உரியவளைப் பார்த்ததும் உணர்வுகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காதலை உணர்த்துகின்றன.
தனக்குரியவனுக்கு/தனக்குரியவளுக்கு ஏற்படும் இன்னல்களில் தோள்கொடுக்க துடிக்கும் வேகம் காதலின் ஆழத்தை உணர்த்துகிறது.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பண்பு காதலின் மென்மையை உணர்த்துகிறது.
ஒன்றுசேரும் காலத்திற்காக காத்திருத்தல் காதலின் உறுதியை உணர்த்துகிறது.
இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்ள ஒருவரை ஒருவர் நாடுவது காதலின் புனிதத்தை உணர்த்துகிறது.
இவையெல்லாம் ஒன்றுசேர்ந்த மொத்த உணர்வே காதல்.