விழிகளில் விழுந்து
இதழ்களில் மலர்ந்து
இதயத்தை திறந்தது
காதல்…
சுடு வெயிலும் இதமானது
கடும் மழையும் சுகமானது
யாவிலும் இன்பம் காட்டியது
காதல்…
வறட்சியில் பசுமை தெரிந்தது
நிசப்தத்தில் இசை பொழிந்தது
சூழலில் அழகைக் கொட்டியது
காதல்…
புது உலகில் பிரவேசித்து
கனவுலகில் சஞ்சரித்து
நிஜ உலகை மறக்கச் செய்தது
காதல்…!!!