பூமியில் பூத்த புதிய பூ
காலடி வைத்தது மண்ணில்…
கள்ளமில்லா மனமது
நடை பயின்றது…
அழகையெல்லாம்
கண்டு களித்தது…
சுற்றி இருப்பவை
அழகானவை மட்டுமல்ல
நல்லவை என்றே நினைத்தது…
அந்தப் பெண் பூவின்
நினைவெல்லாம் நிஜமாக…
என்றும் சுதந்திரமாக உலா வர…
காலம் மாறுமா…!!!
மனித உள்ளங்கள்
அழகாகுமா!!!