தேன்துளிகள் சிந்தும் நின் திருநாமங்கள்
உச்சரிக்கும் பொழுதினிலே இனித்திடும் உதடுகள் சரவணனே!
பேரழகு கொட்டும் நின் திருவுருவம்
நினைக்கும் பொழுதினிலே நிறைந்திடும் மனம் சரவணனே!
புகலிடம் தந்திடும் நின் திருப்பாதங்கள்
சரணடையும் பொழுதினிலே கிடைத்திடும் நிம்மதி சரவணனே!!!
கிடைத்திடும் நிம்மதி
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.