குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதற்கும் அக்குடும்பம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கும் கணவன், மனைவியிடம் இருக்கவேண்டியவை;
அன்பு – மன ஈடுபாடு
நல்ல பழக்கவழக்கம்
பரஸ்பர நம்பிக்கை
புரிந்துணர்வு
ஒளிவுமறைவு இல்லாது ஒருவருக்கொருவர் உண்மையாக இருத்தல்
விட்டுக்கொடுத்தல்
தாழ்வுமனப்பான்மை இல்லாதிருத்தல்
மனம்விட்டுப் பேசுதல்
இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுத்தல்
தவறுகளை அன்பினால் சீரமைத்தல்
இருவருடைய உறவினருடனும் ஆரோக்கியமான உறவைப் பேணல்
நல்ல நண்பர்கள்
நேர்மையான உழைப்பு
கடவுள் நம்பிக்கை
இவை யாவற்றிலும் குடும்பத் தலைவனுக்கும் குடும்பத் தலைவிக்கும் சம பங்கு உள்ளது.
இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தலுடன் மனம்விட்டு கதைத்து, வீட்டு வேலைகளில் தங்களுக்கு பொருத்தமானவற்றை பகிர்ந்து செய்யலாம்.
குடும்பத் தலைவன் மட்டும் வேலைக்குச் செல்பவர் என்றால், குடும்பத் தலைவிக்கும் வீட்டில் பொறுப்பான வேலைகள் காத்திருக்கின்றன.
எனவே குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவதில் குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி இருவருக்குமே சம பங்கு உள்ளது என்பதே எனது கருத்தாகும்.