உன் விழிகளுள்
நீந்திட ஆசை கொண்டேன்…
உன் இதழ்களில்
மலர்ந்திட ஆசை கொண்டேன்…
உன் கரங்களில்
வீழ்ந்திட ஆசை கொண்டேன்…
உன் இதயத்தில்
நுழைந்திட ஆசை கொண்டேன்…
உன் நெஞ்சத்தில்
மஞ்சம் அமைத்திட ஆசை கொண்டேன்…
உன் உயிரினில்
கலந்திட பேராசை கொண்டேன்!!!
நொடிப்பொழுதில்
ஆசைகளை தூண்டியவன்
நீ…
பற்றி எரிந்து அழிக்குமுன்
என்னைக் காத்திடு
கண்ணா…
கணப்பொழுதில்
காதலை விதைத்தவன்
நீ…
விருட்ஷமாய் வளர்ந்திட
கைத்தலம் பற்றிடு
என் மன்னா!!!