கோவில்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைள் எடுக்கவேண்டியது மக்களின் கடமையாகும்.
கோவில் நிர்வாகக்குழு கண்காணித்து நடவடிக்கை எடுப்பது.
ஊர்த் தலைவர்கள் தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது.
அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது.
இப்படியாக படிப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டு அசம்பாவிதங்களை தடுக்கலாம்.
அரசாங்கமும் கவனக்குறைவாக இருந்தால், மக்கள் தான் அடுத்தபடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்தை தூண்டி இத்தகைய அழிவுகளிலிருந்து பாரம்பரிய பொக்கிஷங்களான வழிபாட்டு தலங்களை காப்பாற்ற வேண்டும்.
எனவே இப்படியான அழிவுகளுக்கு மக்களின் அக்கறையின்மையே காரணம் என்பது எனது கருத்து.