கனவுகளில்
தித்திப்பு தரும்
பெண்ணே!
நிஜத்தில்
கசப்பை தருகிறாயே…
விழியோடு விழி சேர மாட்டாயா
என் எண்ணம் அறிய மாட்டாயா…
மலரே!
உன் இதழ் விரிக்க
உன் அனுமதிக்காக
காத்திருக்கும்
உன் சூரியன்
நான்…
நாட்கள் வாரங்களை தொட்டு
மாதங்களை தொடுமுன்
என் இதயத்தை தொட்டுவிடு
அங்கு
உன் காதலை பதித்து
சம்மதம் தந்துவிடு…