விழிகளை நிறைத்த அவள்
நிறைத்துவிட்டாள்
உள்ளத்தை…
எண்ணங்களை சிறைப்பிடித்து
சுழழ விட்டாள்
தன்னைச்சுற்றி…
புன்னகையால் இழுத்து என்னை
அழைத்துச் சென்றாள்
புது உலகம்…
கண்ணசைவால் காதல் சொல்லி
கடத்திச் சென்றாள்
காதல் தேசம்…
அன்பினால் கட்டி என்னை
சிறை வைத்தாள்
தன் இதயத்தில்…