மலரே!
உன்னைப் பறித்து
உள்ளத்துள் வைத்த நாள் முதல்
எங்கும் பரவி
ஆக்கிரமித்துவிட்டாய்
என்னை…
இழுத்து உன்னுள்
அடக்கிவிட்டாய்
என்னை…
சிறிது நேரம்
உன்னை மறந்திட
நந்தவனத்துள் நுழைந்திட
அந்தோ பரிதாபம்…!!!
மலர்களில் எல்லாம் நீயே
தெரிகிறாய்
விழிகளிலிருந்து விலகிட நீயும்
மறுக்கிறாய்…!!!
உன்னை
கைது செய்த என்னை
நீ
கைது செய்துவிட்டாய்
பெண்ணே!
காதல் சிறையில்
வைத்துவிட்டாய்
கண்ணே!!!