
பூமியில் வண்ணங்கள்
இரசித்து பயனை பெற்றிடுங்கள்
இயற்கை தந்த வரமது
அழித்து அழிவை தேடாதீர்…
உயிர் வாழ நீர் காற்று
தந்திடும் மரங்களதை
தேவைக்கு வெட்டினால்
பதிலுக்கு நட்டிடுங்கள்…
பறவைகளும் பிராணிகளும்
நம்மைப்போல் உயிரினங்கள்
ஆதரிக்க விரும்பாவிடினும்
துன்புறுத்த நினைக்காதீர்…
மழை நீர் கழிவு நீர்
செல்வதற்கு வழிவிடுங்கள்
பாதைகளை அடைத்து வைத்து
வௌ்ளம் பெருக செய்யாதீர்…
நோய் நொடிகள் இல்லாத
ஆரோக்கிய வாழ்வு பெற
சுற்றுப்புற சூழலை
மாசடையச் செய்யாதீர்…