நியாயம் கேட்டோம்
இருந்ததையும் இழந்தோம்…
உறவுகள் உடைமைகள் இருப்பிடம் இழந்தோம்…
நிம்மதி இழந்தோம்…
ஓட ஓட விரட்டப்பட்டோம்
நாடோடி ஆனோம்
நாடு விட்டு நாடு சென்றோம்
மொழி பண்பாடு கலாச்சாரம் ஒத்துவருமா!!!
தலைசுற்றி முழி பிதுங்கி வாழ்கிறோம்…
நிலையான வாழ்க்கை
தாய்நாட்டில் கிடைப்பது எப்போ…!!!
தாய் ஓரிடம்
தந்தை வேறிடம்
பிள்ளை பிரிதொரு இடம்…
தொடர்பின்றி பிரிக்கப்பட்டோம்…
இருப்பது இல்லாதது
தெரியாத வாழ்க்கை…
எம்மை விட
காலம் வேகமாக ஓடுகிறது…
இணைவோமா எல்லோரும்!!!
ஒன்றுகூடி வாழ்வோமா…!!!
இன்பம் துன்பம்
மாறி மாறி வருவது வாழ்க்கை…
அறிவோம் எல்லோரும்…
துன்பங்களின் உச்சம்
தொட்டுவிட்டோம்…
இனிவரும் நாட்கள்
நிம்மதி அள்ளித்தருமா…
இன்பத்தின் உச்சம்
தொடுவோமா…!!!