உதிரத்தை உணவாய் தந்தாய்
உலகத்தை பரிசாய் தந்தாய்
வாழும் கலையை கற்றுத் தந்தாய்
துணையாய் இருந்து துணிவைத் தந்தாய்
அன்பை உணர வைத்தாய்
பாசத்தை புரிய வைத்தாய்
கருணையை காட்டி வளர்த்தாய்
அடக்கத்தைச் சொல்லி வளர்த்தாய்
என் மகிழ்வில் நீ மலர்ந்தாய்
என் துயரில் நீ துவண்டாய்
உறவுகளை இணைக்கும் பாலமானாய்
பிணக்குகளில் சமாதான புறாவானாய்
அன்று
பண்போடு வாழ்ந்து வழி காட்டிய
அன்புத் தாயே!
இன்று
பெருமையுடன் உன் வழியில்
நான்…