திருமணத்திற்குப் பின்னும் பெண்கள் நட்பை தொடர்கிறார்கள் என்பது எனது கருத்து.
இன்று இருக்கும் நவீன வசதிகளை (handphone, email, skype) பயன்படுத்தி திருமணமானபின்னும் ஆரோக்கியமான நட்பை பேணுகிறார்கள். வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் நேரம் கிடைக்காவிட்டாலும் நல்லது கேட்டதற்கு நிச்சயமாக தொடர்பு கொண்டு பயன் பெறுகிறார்கள், மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆரோக்கியமான நட்பின் மூலம் இரு பகுதியினரும் தேவைப்படும் நேரங்களில் உதவிகள், ஆலோசனைகள் பெறுகிறார்கள். பொதுவாக பெண்களின் நட்பு இரு பகுதியினரின் குடும்பத்தையுமே பிணைத்துவிடுகிறது. அதுவே ஆரோக்கியமானது.
குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளால் உண்டாகும் மன அழுத்தங்களை கொட்டி ஆறுதல் பெறுவதற்கு நம்பகமான உறவு நட்பு. அதை தவறாது பயன்படுத்துகிறார்கள் பெண்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களே பெரும்பாலும் ஆண் நட்புகளை குடும்பத்துடன் பேணுகிறார்கள். அதுவே பாதுகாப்பானதும் ஆகும்.
எரிச்சல், பொறாமை கொள்ளும் நட்புகளை அடையாளம் கண்டு தவிர்ப்பது பெண்களின் தலையாய கடைமையாகும். அவர்கள் குடும்பத்தை குலைப்பதற்கு வழிவகுப்பவர்கள் ஆவர். இந்த விஷயத்தில் பெண்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து, குடும்பம் குலையாமல் இருப்பதற்கு வழி சொல்வதும், இக்கட்டான வேளைகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுமே சிறந்த நட்பு. திருமணமான பின்னும் இதை பெண்கள் பேணுகிறார்கள் என்பது உண்மை.