உறங்கும் உணர்வுகளை
எழுப்பிவிட்டாயே
பின்விளைவுகளை
அறியாமலே…
நித்தம் உன்னை ரசிப்பது
எனது வழக்கம்…
அதை பாராது செல்வது
உனது வழக்கம்…
சீராக சென்ற பொழுதை
குழப்பிவிட்டது
உனது ஒரு பார்வை…
அது கனவுகளால்
நிறைத்துவிட்டது
எந்தன் நெஞ்சை…
இனிவரும் நாட்கள்
தருவது
துன்பமா இன்பமா!!!