தூதுவளை இலை – 25
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
உப்பு, தேசிப்புளி – அளவாக
எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு சிறிய உரலில் இடித்து அல்லது அம்மியில்/மிக்ஸ்சியில் அரைத்து சம்பல் செய்து மதிய உணவுடன் உண்ணலாம்.
சளித் தொல்லை நீங்க பெரியவர் முதல் சிறியவர் வரை தினமும் உண்ணலாம். சளி முற்றாக நீங்கும் வரை சாப்பிட வேண்டும்.