சொத்து குவிக்க
பெற்றோர்
ஓடி ஓடி உழைக்க…
அன்பு நாடி
ஏங்கித் திரியும் பிள்ளை
பாசம் பொழிய யாரும் இன்றி
மனநலம் பாதிக்க
உரிய முறையில் பராமரிப்பு இன்றி
உடல்நலம் பாதிக்க
கூடாத சேர்க்கை
தீய வழியில் அழைத்துச் செல்ல
சேர்த்த செல்வம்
சுகம் நாடி தொலைந்து போக
நிம்மதி இல்லா வாழ்க்கைப் பயணம்
தேவை தானா!!!
பிள்ளைகளுடன்
கொஞ்சிப் பேச
கூடி விளையாட
சேர்ந்து பசியாற
திட்டமிட்டு நேரம் ஒதுக்குவோம்…
அன்பையும் பண்பையும்
ஊட்டி வளர்ப்போம்…
நல்ல மனிதனாய்
செதுக்கி உருவாக்குவோம்…