எம்மால்
பிறருக்கு
உதவ முடியாவிட்டாலும்
உபத்திரவம் கொடாது
வாழ்தல்
நன்றாம்…
துன்பங்களும் துயரங்களும்
எமக்கு நேர்வதை மட்டும்
கருத்தில் கொள்ளாது
பிறருக்கும் உண்டு என்பதை உணர்ந்து
வாழ்தல்
சிறப்பாம்…
எமது செயற்பாடுகள்
சுயநலமாய் இல்லாது
அடுத்தவர் நலனுக்கு
பங்கம் ஏற்படாது
வாழ்தல்
அற்புதமாம்…
எதிர்பாராது
அன்பை
அள்ளி அள்ளிக் கொடுத்து
வாழ்தல்
ஆனந்தமாம்…