இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சமுதாயம், பண்டிகை சமயம் குதூகலத்துடன் அதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டாடுவதில் பின் நிற்பதில்லை.
நவீன காலத்திற்கேற்ப வழிகள் மாறினாலும் பண்டிகைக்குரிய அர்த்தம் இழக்கப்படவில்லை என்பது எனது கருத்து.
உதாரணமாக பொங்கல் பண்டிகைக்கு, அடுப்பு – மண்பானைக்கு பதிலாக குக்கர் பயன்படுத்துகிறார்கள்.
உறவினர், நண்பர்களிடம் நேரில் செல்ல முடியாதவர்கள் தொலைபேசி/கைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்கள்.
கோலம் போட இட வசதி இல்லாதவர்கள் வீட்டின் உள் வாசலிலே சிறிய கோலமிட்டு மகிழ்கிறார்கள். கூந்தலில் சூடுவதற்கும் வீட்டு அலங்காரத்திற்கும் இயற்கையான மலர்களை பெற முடியாதவர்கள் செயற்கை மலர்களை பயன்படுத்துகிறார்கள்.
இப்படியாக பூஜை, அலங்காரம், புத்தாடை, பலகாரம், ஆலய வழிபாடு என இன்றும் மக்கள் பண்டிகைகளை அவற்றிற்கேற்ப கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.