
புன்னகையால் பிடித்து வைத்து
புது உலகம் அழைத்துச் சென்றாய்…
கண்ணசைவால் காதல் சொல்லி
சொர்க்கத்தை காட்டிவிட்டாய்…
வார்த்தைகளை கட்டி வைத்து
மௌனத்தால் கொல்கின்றாய்…
மனமின்றி விலகிச் சென்று
நரகத்தையும் காட்டுகின்றாய்…
நேரிலே காணும்போது
மறைந்து நின்று வதைக்கின்றாய்…
கனவிலே வரும்போது
நெருங்கி மகிழ்வு தருகின்றாய்…
பெண்ணே!
விடுதலை தந்திடு
வார்த்தைகளுக்கு…!!!
நிஜத்தை பூசிடு
கனவுகளுக்கு!!!