பூக்களை கொய்யும்போது
என் இதயத்தையும் கொய்துவிட்டாய்…
மலர்ச் சரத்தில்
இணைத்துவிட்டாய்…
உன் கூந்தலை தழுவி
தோள்களில் தவழும் என்னை
காட்டிக்கொடுத்துவிடும்
என் விழிகள்…
புரிந்ததும்
என்ன செய்யப்போகிறாய்…!!!
அலட்சியமாய்
எறிந்துவிடுவாயா…
காதலுடன்
உள்ளத்துள் வைப்பாயா…
ஏக்கத்துடன் பார்த்திருக்கும்
நான்
மன்மதனின் தாக்குதலுக்கு
ஆளானவன்…
மலர்க் கணைகள் தொடுத்து
காத்திருப்பவன்…
உன்னை
நேசிப்பவன்!!!