
“தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.”
*****
“வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.”
*****
“ஒருவரை நமக்கு பிடித்திருந்தால் அவரின் தீய குணம் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
அவரை பிடிக்கவில்லை எனில் அவரின் நற்குணம் நம் கண்களுக்கு தெரிவதில்லை.”
*****
“பிழைக்க விரும்பினால் உழைக்க விரும்பு.
இரை தேடு, இறையையும் தேடு.
நிறைகளைப் பேசு, நிறையப் பேசாதே.
கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள்.
பெரியோரை வணங்கு, சிறியோரை வாழ்த்து.”
*****
“தகுதியானவனுக்கு விட்டுக் கொடு.
அவன் தோற்றுப் போயிருந்தால் தட்டிக் கொடு.
எதிர் காலத்தில் நீயும் வாழலாம் அவன் மனதில், வழிகாட்டி என்னும் பெயரில்.”
*****
“உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே.”
*****
“இளமை, அற்ப இன்பங்களில் மூழ்கிச் சோர்வுறும் பருவம் அல்ல.
ஆராய்ந்து அறிவதற்கும், சாகசங்கள் செய்வதற்குமான பருவம்.”
*****