
“மண்வெட்டியை பிடிக்கின்ற உழைப்பளியுடைய கரங்கள் ஆரம்பத்தில் சிவந்து பின் கிழிந்து கடைசியில் பாறை மாதிரி உரமாகும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனதையும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகிவிடும். அப்படி ஒரு மனது அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சிகரத்திலும் கூடு கட்டி குடியிருக்கலாம்.”
*****
“சிந்தனை எதுவோ அதுவாகவே நீயாகிறாய்.”
*****
“மனிதன் குறையுடையவன் மட்டுமல்ல. குறை காண்பவனும் ஆவான்.
பிறர் குறையை காண்பவன் அரை மனிதன்.
தன் குறையை காண்பவன் முழு மனிதன்.”
*****
“பூஜ்யம் என்பது வெறுமையல்ல அதுதான் வெற்றியின் முதல் படி!.
வெறும் புள்ளிகள் என்பது முடிவும் அல்ல அதுதான் தொடக்கத்தின் வாசல் படி!”
*****
“வீரம் என்பது எதிரியை எவ்வளவு சீக்கிரத்தில் தாக்குகிறாய் என்பதில் இல்லை.
வீரம் என்பது எதிரியை எவ்வளவு சீக்கிரத்தில் மன்னிக்கிறாய் என்பதில்
இருக்கிறது.”
*****
“ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது.
அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும்.”
*****
“தீயை தலைகீழாகப் பிடித்தாலும் தீச்சுடர் ஒருபோதும் கீழ் நோக்கி எரிவதில்லை.
அதுபோல் தான் நல்லவர்களும் எத்தகைய சோதனைகளை எதிர்கொண்ட போதிலும் தங்கள் நற்குணங்களை விட்டுவிடுவதில்லை.”
*****
“அவசியம் இல்லாதவரிடம் உண்மைகளை சொல்லாதீர்கள். அவசியமானவர்களிடம் பொய்களை சொல்லாதீர்கள்.
இரண்டுமே உங்களைக் காயப்படுத்தும்.”
*****