
“படித்தவர் எல்லோரும் அறிவாளிகளும் அல்ல.
படிக்காதோர் எல்லோரும் முட்டாள்களுமல்ல.”
*****
“வந்தாரை எல்லாம் வாழவைக்கலாம்.
ஆனால் ஆள வைக்கவேண்டியதில்லை.”
*****
“வாழ்ந்து காட்டுதலைவிட வேறில்லை, வலுவானதொரு பழிவாங்கல்.”
*****
“உங்களில் வீரன் யார் என்றால்
மற்போரில் எதிரியை வீழ்த்துபவன் அல்லன்;
மாறாக, கோபம் வரும்போது தன்னை
அடக்கிக்கொள்பவனே வீரன்.”
*****
“சில நேரங்களில் நாம் செய்யும் தவறு
நமக்கு புரிவதே இல்லை,
வேறொருவர் அதை நமக்கு
செய்யும் வரை.”
*****
“உலகில் எதற்குமே முடிவு இல்லை.
ஒரு அருவியின் முடிவு தான் ஒரு நதியின் தொடக்கம்.
எதை பற்றியும் வருந்தாமல் ஒவ்வொரு நாளும் புதிதாய் வாழ்வோம்.“
*****
“நீ நேசிப்பவரை இன்றே நீ முடிந்த அளவுக்கு
மகிழ்வாய் வைத்துக் கொள். ஏனெனில் நாளை
அவரை நீ கண்டிப்பாக சந்திப்பாய் என்று
உறுதி சொல்ல முடியாது.”
*****