
“உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும்.
பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.”
*****
“பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது.”
*****
“போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக் கருதுபவர்களின் உள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.”
*****
“வசதி அதிகரிக்க புத்தி கெடும், ஆணவம் அதிகரிக்கும். ஆணவத்தின் வெற்றி தற்காலிகமானது. முடிவு அவலம் நிரம்பியது. எனவே வசதி அதிகரித்தாலும் பெரும் பதவி கிடைத்தாலும் நிலைமை மாறக்கூடாது.”
*****
“ஒரு நிர்வாக பொறுப்பை அதிர்ஷ்டத்தினால் அல்ல, புத்திக்கூர்மையால் மட்டுமே நிர்வாகிக்க முடியும்.”
*****
“அடிக்கடி கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் கோப உணர்ச்சி கல்லீரலை பாதிக்கிறது.”
*****
“ஆற அமர சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
அதேநேரம் காலம் பொன்போன்றது. முடிவெடுப்பதில் காலதாமதமும் தவிர்க்கப்பட வேண்டும்.
எந்தப் பிரச்சினையிலும் முடிவெடுக்க வேண்டும்.
முடிவெடுக்காமல் பிரச்சினையை அதன் போக்கில் விட்டுவிடக் கூடாது. சரியோ தவறோ முடிவெடுக்க வேண்டும். முடிவெடுப்பது சரியா தவறா என்ற சந்தேகத்தில், தயக்கத்தில் விட்டுவிடுவதால் பல வாய்ப்புக்கள் கைநழுவி செல்கின்றன.”
*****