
“உங்களை விட துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறையப்பேர் இருப்பதைக் கண் திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும்.”
*****
‘உலகம் என்பது நாடக மேடை. நாமெல்லாம் நடிகர்கள்.’ என ஷேக்ஸ்பியர் சொன்னதை ஏற்றால், வாழ்வில் சந்திக்கும் துன்பங்களும் மேடையில் நடிகர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் போல நம்மைத் தாக்காது.”
*****
“வறுமை வந்தால் வாடாதே.
பணம் வந்தால் ஆடாதே.”
*****
“தன்னை அறிந்தவன் ஆசைப்பட மாட்டான்.
உலகை அறிந்தவன் கோபப்பட மாட்டான்.
இந்த இரண்டையும் உணர்ந்தவன் கஷ்டப்பட மாட்டன்.”
*****
“தெரிந்தவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நல்ல மனிதன் ஆகிறாய்.
தெரியாதவர்களுக்கு உதவி செய்யும்பொழுது கடவுள் ஆகிறாய்.”
*****
“கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.
மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே.
அழுகையில் ஒருவரையும் நம்பாதே.”
*****
“சின்ன நெருப்பாய் திறமை இருந்தால் காற்று அதனை அணைக்கும்.
காட்டு நெருப்பாய் திறமை இருந்தால் காற்று அதனை வளர்க்கும்.”
*****
“இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம், ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை.”
*****