
“தாயிடம் அன்பாகப் பேசுங்கள்.
தந்தையுடன் பண்பாகப் பேசுங்கள்.
ஆசிரியரிடம் அடக்கமாகப் பேசுங்கள்.
துணைவியுடன் உண்மையாகப் பேசுங்கள்.
உடன் பிறந்தவனுடன் அளவாகப் பேசுங்கள்.
உடன் பிறந்தவளுடன் பாசத்தோடு பேசுங்கள்.
குழந்தைகளிடம் ஆர்வத்தோடு பேசுங்கள்.
உறவினர்களிடம் பரிவோடு பேசுங்கள்.
நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்.
அதிகாரியிடம் பணிவோடு பேசுங்கள்.
வியாபாரியிடம் கறாராக பேசுங்கள்.
வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்.
தொழிலாளரிடம் மனித நேயத்தோடு பேசுங்கள்.
இறைவனிடம் மெளனமாக பேசுங்கள்.”
*****