“வில்லில் இருந்து எய்யப்படும் அம்பு, ஒரு படி பின்னோக்கி சென்று குறி வைத்தால் தான் மூன்று படி முன்னோக்கி வந்து தன் இலக்கை அடைய முடியும்.
வாழ்க்கையில் நாம் அடையும் பின்னடைவுகளும் அப்படித் தான். ஒரு படி சறுக்கினாலும் அது மூன்று படி முன்னேறே உதவும் என்ற நம்பிக்கை கொள்வோம்.”
*****
“பேச்சை விட மௌனமே சிறந்தது.
பேசித்தான் தீரவேண்டுமென்றால் அந்தப் பேச்சு உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டுமே.”
*****
“ஏழையாகப் பிறந்து ஏழையாகக்கூட இறந்துவிடு தவறில்லை.
ஆனால் அதையே காரணம் காட்டி ஒருபோதும் கோழையாக இறந்துவிடாதே.”
*****
“பொருளால் பண்பால் மற்றவரை தாழ்வாக எண்ணாதே.
எறும்புக்கும் உயிர் உண்டு. அதற்கும் கனவுண்டு. அது வாழ்வதற்கும் வாழ்க்கை உண்டு.”
*****
“ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல,
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.”
*****
“மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது,
ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.”
*****
“பணமும், பதவியும் மோசமானவை என்று அறிஞர்கள் ஏன் சொல்கிறார்கள்?
அவை வரக்கூடாதவனுக்கு வருவதால்,
கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.”
*****
*மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட,
ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.
*****