“உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது.
சேவைதான் வெளிப்படுத்தும்.
அன்பு, கருங்கல்லையும் பிளக்கும்.”
*****
“தள்ளாடும் வயது வருமுன்பு தனக்கென சேர்த்துக்கொள்.
தனித்துவிட்டாலும் தளராமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்.”
*****
“எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டோம் எனில் அதை எளிய முறையில் முடித்துவிட முடியும். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ வேண்டும். வாழ்க்கையை தெரிந்து கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. பிரச்சினைகள் – சிக்கல்கள் – தடைகள் – தோல்விகள் வரும்போது மனம் தளர்வடைகிறது. தடுமாறுகிறது. அந்த நேரத்தில் ஏன் இப்படி ஆனது? இனி செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து செயல்பட்டால் நம் பிரச்சினை சூரிய ஒளிப்பட்ட பனித்துளிபோல் கரைந்து போகும்.
ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்”
*****