“வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதைவிட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.”
*****
“மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடமுள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.”
*****
“உழைத்துப் பாடுபடுவதிலும், மனமார முயற்சி செய்வதிலும் எப்போதும் விடாப்பிடியாக இருங்கள்.
எந்த ஒன்றையும் முடிந்த அளவு சிறப்பாகச் செய்வதிலும் எப்போதும் விடாப்பிடியாக இருங்கள்.
உங்கள் கடமையைத் தினமும் செய்து முடிப்பதிலும் எப்போதும் விடாப்பிடியாக இருங்கள்.
உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் எப்போதும் விடாப்பிடியாக இருங்கள்.
எந்த ஒரு விருப்பத்தையும், இலட்சியத்தையும் செயல் வகையில் செய்து முடித்தால்தான் வெற்றிகள் தொடர்ந்து வரும் என்பதில் உறுதியாக இருங்கள். அதற்கேற்ப எப்போதும் விடாப்பிடியாக உழையுங்கள்.”
*****
“எதையும் அறிந்துகொள்ள விரும்பும் ஆர்வம், தன்னம்பிக்கை, துணிவு, மாறாத திடப்பற்று ஆகிய நான்கு தன்மைகளிலும் மிகவும் உயர்ந்தது தன்னம்பிக்கையே.
ஒருவரின் உறுதியான நம்பிக்கைதான் அனைத்து வெற்றிகளுக்கும் முதல் படிக்கட்டு.
நீங்கள் ஏதேனும் ஒரு காரியம் பற்றிச் சிந்தித்தால் அது ‘முடியும்’ என்று சிந்தியுங்கள். சந்தேகப்படாமல் முழு நிறைவான நம்பிக்கையுடன் எல்லா வழிகளிலும் ஆர்வம் குறையாமல் முயற்சி செய்யுங்கள். நமது எல்லாக் கனவுகளும் மிகுந்த துணிச்சலுடன் தடைகளை முறியடித்துச் செயல்படும்போதுதான் நிறைவேறும்.
எனவே, உறுதியான தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்.”
*****
“உங்கள் ஆழ்மனம் நீங்கள் தூங்கும்பொழுதும் விழிப்புணர்வுடன் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.
எனவே, எப்போதும் நல்லவற்றையே சிந்தித்து, நேர்வழியிலேயே சென்று வெற்றிபெறவேண்டும் என்று நீங்கள் விழித்திருக்கும் நேரத்திலும் கட்டாயமாக சிந்தியுங்கள்.
இப்படி மனதிற்குள் நல்லவற்றை ஊட்டி, ஊட்டி ஒருமுகமான சிந்தனையுடன் செயல்பட்டால் உங்கள் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஆழ்மனம் உங்களை, நீங்கள் சிந்தித்ததைப் பெற தூண்டிக்கொண்டே இருக்கும்.”
*****