“அன்பை அபகரிப்பதில் திருடனாக இரு.
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு.
முன்னேறத் துடிப்பதில் மூர்க்கனாய் இரு.
முயற்சி செய்வதில் பிடிவாதக்காரனாய் இரு.
கர்வம் கொள்வதில் கஞ்சனாக இரு.
கவலை கொள்வதில் சோம்பேறியாக இரு.
கோபம் கொள்வதில் கருமியாக இரு.
கொஞ்சிப் பேசுவதில் வள்ளலாக இரு.
எதிர்ப்பை வெல்வதில் முரடனாக இரு.
என்றும் நீ நல்ல மனிதனாக இரு.”
*****
“உழைப்பானது
நம்மைச் சூழும் கவலைகளிலிருந்தும்,
நம்மை அணுகும் சிறுமைகளிலிருந்தும்,
துன்பங்களிலிருந்தும்,
நம்மைத் தாக்கும் தீய எண்ணங்களிலிருந்தும்
விடுதலை அளிக்கும்.”
*****
“நீங்கள் அன்பு செலுத்தும் எதுவும் உங்களை விட்டு விலகினால் விட்டு விடுங்கள். உங்கள் அன்பு நிஜமானது என்றால் மீண்டும் அது உங்களிடமே திரும்ப வரும்.”
*****