“தோல்வி வந்தாலும், உன் முயற்சியில் நீ இன்பம் கண்டால், அது வெற்றியிலும் பெரிய இன்பமே.”
*****
“கடவுள் கருணைக்கடல், ஆனால் அதிலே மொள்ள நாம் உபயோகிக்கும் வாளிதான் மிகச்சிறியது.”
*****
“படைக்கும் உணவில் ஒரு சிட்டிகை அன்பை கலந்து பரிமாறு. வெவ்வேறு ருசியுள்ள எல்லோருக்கும் அது பிடிக்கும்.”
*****
“வாழ்க்கை இன்பமானதும் அல்ல, துன்பமானதும் அல்ல. தைரியத்தோடும், தியாக உணர்ச்சியோடும் ஈடுபடவேண்டிய ஒரு கடினமான தொழில்.”
*****
“உங்களால் செய்யமுடியாததை இந்த வாழ்வில் செய்யாவிட்டால் பரவாயில்லை. ஆனால் உங்களால் செய்யமுடிந்ததைச் செய்யாவிட்டால் அது பெரும் அவலம். எனவே, நீங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே மகிழ்ச்சிக்குத்தான் ஏங்குகின்றன. அதை நிகழச் செய்யுங்கள்.”
*****
“திறமைகளைத் தேக்கி வைக்காதீர்கள். அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு இருந்தால்தான் பலன் கிடைக்கும்.”
*****