“அரைகுறையாக எதையும் செய்யாதீர்.
நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள்.
கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.”
*****
நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது.
ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.”
*****
“மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது “கடவுள் இருக்கிறார்” என்பதே.”
*****
“மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.”
*****
“அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.
தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.”
*****
“நான் எதையும் சாதிக்கவல்லவன் என்று சொல்லுங்கள்.
நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.”
*****