“மனிதர்கள் நிலைபெறுவது உருவங்களால் அல்ல, செயல்களால்.”
*****
“சந்தித்தே ஆகவேண்டிய பிரச்சனைகளைக் கண்டு ஓடினால் தெருநாய் போல் அது நம்மைத் துரத்தும்.
துணிவு என்ற கல்லைக் கையில் எடுத்தால் அது தலை தெறிக்க ஓடும். அஞ்சாமையை அணிகலனாகப் பூண்டவர்களுக்கு மலையளவு துன்பங்களும் கடுகாகும்.”
*****
“விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்
ஒவ்வொரு மனிதனும் விதைக்கிறான். ஒருவன் வாய்ச் சொற்களால் விதைக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.
எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.
எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.
செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே ‘வெற்றி’ என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.
பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.
நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.
நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.”
*****