“நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.”
*****
“வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.”
*****
“நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.”
*****
“இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீங்கள் ஓடினால், நாளை உங்களைத் தேடி வரும் இன்பங்களை யார் வரவேற்பது?”
*****
“தன்னைக் காயப்படுத்தியவரைவிட்டு மௌனமாக விலகிச் செல்பவர்தான் உண்மையான பக்குவநிலையை அடைந்தவராவார்.”
*****
“பிரச்சனைகளைப்பற்றி சிந்திப்பதை விட்டு பிரச்சனைகளுக்கான தீர்வைப்பற்றி சிந்தித்தால் பிரச்சனைகள் தொலைந்து போகும்.”
*****
“ஆயிரம் பறவைகளின் நிம்மதியைக் கெடுக்க ஒரு கல் போதும்.
ஆயிரம் மனிதர்களின் நிம்மதியைக் கெடுக்க ஒரு ‘கெட்டவன்’ போதும்.”
*****